கொழும்பு, வெள்ளவத்தையின் முக்கியமான இடங்களில் ஒன்றான நெல்சன் வீதியில் புதிய தொடர் மாடி குடியிருப்புக்கான பணிகள் அண்மையில் ஆரம்பித்துள்ளன. பொறியிலாளர் கமலேந்திரனின் ஸ்கைலார் எஞ்சினியரிங் பிரைவேட் லிமிட்டட் நிறுவனத்தினால் இந்த தொடர்மாடி நிர்மாணப்பணிகள் ஆரம்பித்துள்ளன.
ஒவ்வொரு மாடியிலும் மூன்று வீடுகளைக் கொண்ட 24 வீடுகள் இந்த தொடர்மாடி கட்டடத்தில் அமைக்கப்படவுள்ளன. 2 படுக்கையறைகளை கொண்ட 810 சதுர அடி வீடு, 3 படுக்கையறைகளை கொண்ட 1180 சதுர அடி வீடு, 3 படுக்கையறைகளை கொண்ட 1410 சதுர அடி வீடு என மூன்று வீடுகள் ஒவ்வொரு மாடியிலும் காணப்படும்.
தளம் மற்றும் முதலாம் மாடிகள் வாகன தரிப்பிடங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன. இலக்கம் 29 B நெல்சன் வீதி எனும் முகவரியிலேயே இந்த கட்டட நிர்மாணம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இடத்தை பார்வையிட விரும்புபவர்கள் நேரடியாக பார்வையிட முடியுமெனவும். முற்பதிவுகள் ஆரம்பித்துள்ளதாகவும், விரும்புபவர்கள் தொடர்புகொண்டு முற்பதிவுகளை மேற்கொள்ள முடியுமெனவும் ஸ்கைலார் நிறுவனத்தின் பணிப்பாளர் பொறியிலாளர் கமலேந்திரன் தெரிவித்துள்ளார்.
விபரங்கள் புகைப்பட வடிவில் கீழுள்ளன.








