இந்தியை கட்டாயம் ஏற்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியதை வன்மையாக கண்டிப்பதாக தி.மு.கவின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு அமைச்சர், உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது குறித்து சமூகவலைத்தளப்பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், இந்த ஜனநாயக விரோத நிலைப்பாடு இந்திய ஒன்றியத்தின் வளமான மொழியியல் பன்முகத்தன்மையை புறக்கணிக்கிறது எனவும் அவர் சாடியுள்ளார்.
தமிழ்நாட்டில் தமிழுக்கு மேலோட்டமான பாராட்டு, வட இந்தியாவில் இருந்து வரும் ஏகாதிபத்திய இந்தி ஆதரவு அறிக்கைகள், பா.ஜ.கவின் இரட்டை வேடத்தை அம்பலப்படுத்துகிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்தித் திணிப்பை எதிர்த்த வரலாறு தமிழகத்திற்கு உண்டு. பாசிஸ்டுகளின் எதேச்சதிகார நகர்வுகளை உறுதியாக நிராகரிக்கும். இந்தி திணிப்பை நிறுத்துங்கள் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.