வவுனியா சிறைச்சாலையில் விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்!

சின்னமுத்து தொற்று காரணமாக, ஜூலை 25 முதல் இரண்டு வார காலத்திற்கு வவுனியா சிறைச்சாலையில் விதிக்கப்பட்டிருந்த நடமாட்டத் தடைகள் இன்று (07.08) முதல் நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வவுனியா சிறைச்சாலையில் தற்போது தகுந்த சூழ்நிலை இருப்பதாக வவுனியா பிராந்திய தொற்றுநோய் தடுப்பு பிரிவு உறுதிப்படுத்தியதையடுத்து இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வவுனியா சிறைச்சாலையில் 06 கைதிகளுக்கு சின்னமுத்து நோய் பரவியதையடுத்து, நோய் பரவுவதை கட்டுப்படுத்தும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நடமாட்ட கட்டுப்பாடுகளை விதிக்க சிறைச்சாலை திணைக்களம் நடவடிக்கை எடுத்திருந்தது.

Social Share

Leave a Reply