மீண்டுமோர் படுகொலை திட்டத்தில் இருந்து தப்பிய செலன்ஸ்கி!

உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் செலன்ஸ்கி மீண்டும் ஒரு படுகொலை திட்டத்தில் இருந்து தப்பியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

உக்ரைன் பாதுகாப்பு சேவை அதிகாரிகள்  சந்தேகத்தின் அடிப்படையில் பெண் ஒருவரை கைது செய்துள்ளனர். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் மேற்படி சதிதிட்டம் அம்பலமாகியுள்ளது. 

குறித்த பெண் உக்ரைன் ஜனாதிபதியின் நகர்வுகளை, சந்திக்கும் நபர்களை, செல்லும் பகுதிகளை ரஷ்யாவுக்கு தெரியப்படுத்தி வந்துள்ளார். 

தெற்கு மைகோலேவ் பகுதிக்கு ஜெலென்ஸ்கியின் வருகை பற்றி தகவல் தெரிவித்த நிலையில், ரஷ்யா அப்பகுதியில் ஒரு பெரிய வான்வழி தாக்குதலை கட்டவிழ்த்துவிட திட்டமிட்டிருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

 இந்த நிலையில், துரோகிகளுக்கு எதிராகவும் உக்ரைன் போரிடும் என ஜெலென்ஸ்கி தமது டெலிகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply