மின் உற்பத்தி முற்றாக நிறுத்தப்படும்!

சமனல ஏரி நீர்த்தேக்கத்திலிருந்து உடவலவ நீர்த்தேக்கத்திற்கு நீர் விடப்படுவதால் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 16 ஆம் திகதி சமனல குளத்தின் மின் உற்பத்தி முற்றாக நிறுத்தப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் இருந்து விடுபட மாற்று மின்சாரத்தை கொள்வனவு செய்ய முடியாத பல மாவட்டங்களில் 3 மணிநேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

பாராளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை இன்று (08.08) சமர்ப்பித்து உரையாற்றிய அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இதன்போது தொடர்ந்து கருத்து வெளியிட்டுள்ள அவர், ”ஆகஸ்ட் 16ஆம் திகதி சமனல குளத்தின் மின் உற்பத்தி முற்றாக நிறுத்தப்படும். அது முற்றாக நிறுத்தப்பட்டால் மாத்தறை மாவட்டம், காலி, இரத்தினபுரி மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் முழுமையாக அல்லது மூன்று மணித்தியாலங்கள் மின்வெட்டு அமுற்படுத்தப்படடும்.

ஒரு பகுதியாக அல்லது பகலில் ஒரு மணி நேரம், இரவில் இரண்டு மணி நேரம் என குறித்த மின்வெட்டு அமுற்படுத்தப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply