கண்டி பல்லேகல சர்வதேசக் கிரிக்கெட் மைதானத்தில் இன்று இறுதி நாள் போட்டிகள் ஆரம்பித்துள்ளன. முதற் போட்டியில் பி-லவ் கண்டி அணி கோல் டைட்டன்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டியில் வெற்றி பெறுமணி குறைந்த பட்சம் இரண்டாம் இடத்துக்கு செல்லும் வாய்ப்பு காணப்படுகிறது.
இதன் காரணமாக இரு அணிகளும் வெற்றி பெற கடுமையாக போராடுமென எதிர்பார்க்கலாம். கண்டி அணி கண்டியில் நடைபெற்ற இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. இதன் காரணமாக காலி அணி சவால்களை எதிர்கொள்ளும் வாய்ப்புகள் காணப்படுகின்றன.
இரு அணிகளுக்குமிடையில் நடைபெற்ற முதற் போட்டியில் காலி அணி வெற்றி பெற்றிருந்தது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற காலி அணி களத்தடுப்பை தெரிவு செய்துள்ளது.
அணி விபரம்
பி-லவ் கண்டி : தினேஷ் சந்திமால், பக்கார் ஷமான், செஹான் ஆராச்சிகே, அஞ்சலோ மத்யூஸ், இசுரு உதான, வனிந்து ஹசரங்க (c), முஜீப் உர் ரஹ்மான், ஆஷிப் அலி, துஸ்மாந்த சமீர, நுவான் பிரதீப், மொஹமட் ஹரிஸ்,
கோல் டைட்டன்ஸ்: ஷெவோன் டானியல், லசித் குரூஸ்புல்லே, பானுக ராஜபக்ச, டிம் செய்பேர்ட்(wk), ஷகிப் அல் ஹசன், தசுன் ஷானக (c), லஹிரு சமரகோன், தப்ரைஸ் ஷம்சி, கசுன் ராஜித, அஷான் பிரியரஞ்சன்