கோல் டைட்டன்ஸ் மற்றும் பி-லவ் கண்டி அணிகளுக்கிடையிலான போட்டி கண்டி பல்லேகல சர்வதேசக் கிரிக்கெட் மைதானத்தில் இன்றைய முதற் போட்டியாக நடைபெற்று வருகிறது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற காலி அணி களத்தடுப்பை தெரிவு செய்தது. முதலில் துடுப்பாடிய கண்டி அணி அபாரமான துடுப்பாட்டம் மூலம் வெற்றி பெறக்கூடிய இலக்கொன்றை தொட்டுள்ளது.
ஆரம்பம் முதலே நல்ல முறையில் துடுப்பாடிய கண்டி அணிக்கு பக்கார் ஷமான் சிறந்த ஆரம்பத்தை வழங்கினார். அவருக்கு மொஹமட் ஹாரிஸ், டினேஷ் சந்திமால் ஆகியோர் நல்ல இணைப்பாட்டங்களை வழங்கினார்கள். மத்தியவரிசையில் களமிறங்கிய வனிந்து ஹஸரங்க அதிரடியாக அடித்தாடி ஓட்ட எண்ணிக்கையினை சடுதியாக அதிகரித்தார். 18 பந்துகளில் அரைச்சதத்தை கடந்தார். அவரோடு இணைந்து அஞ்சலோ மத்தியூசும் அதிரடி நிகழ்த்த வான வேடிக்கையாக மைதானம் காட்சியளித்தது. 77 ஓட்டங்களை இருவரும் இணைப்பாட்டமாக பகிர்ந்தனர்.
20 ஓவர்களில் 05 விக்கெட்களை இழந்து 203 ஓட்டங்களை கண்டி அணி பெற்றுக் கொண்டது. இந்த தொடரில் முதற் தடவையாக அணி ஒன்று 200 ஓட்டங்களை கடந்துள்ளது.
கண்டி அணி கண்டியில் நடைபெற்ற இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ள நிலையில் இன்று மூன்றாவது போட்டியில் வெற்றி பெறக்கூடிய சூழ்நிலை ஒன்று உருவாகியுள்ளது.
இரு அணிகளுக்குமிடையில் நடைபெற்ற முதற் போட்டியில் காலி அணி வெற்றி பெற்றிருந்தது.
| வீரர் | ஆட்டமிழப்பு | பந்துவீச்சாளர் | ஓ | ப | 4 | 6 |
| மொஹமட் ஹரிஸ் | பிடி – தப்ரைஸ் ஷம்சி | ரிச்சட் நகர்வா. | 17 | 14 | 3 | 0 |
| பக்கார் ஷமான் | பிடி – ரிச்சட் நகர்வா. | லஹிரு சமரகோன் | 45 | 35 | 3 | 2 |
| தினேஷ் சந்திமால் | பிடி – ரிச்சட் நகர்வா. | தப்ரைஸ் ஷம்சி | 25 | 17 | 3 | 1 |
| அஞ்சலோ மத்யூஸ், | பிடி – கசுன் ராஜித | லஹிரு சமரகோன் | 40 | 23 | 3 | 2 |
| வனிந்து ஹசரங்க | பிடி – ஷெவோன் டானியல் | கசுன் ராஜித | 64 | 27 | 9 | 2 |
| ஆஷிப் அலி | 02 | 03 | 0 | 0 | ||
| இசுரு உதான | 03 | 02 | 0 | 0 | ||
| உதிரிகள் | 07 | |||||
| ஓவர் 20 | விக்கெட் 05 | மொத்தம் | 203 |
| பந்துவீச்சாளர் | ஓ | ஓ.ஓ | ஓட்ட | விக் |
| கசுன் ராஜித | 04 | 00 | 42 | 02 |
| லஹிரு சமரகோன் | 04 | 00 | 31 | 02 |
| ரிச்சட் நகர்வா. | 04 | 00 | 31 | 01 |
| தப்ரைஸ் ஷம்சி | 04 | 00 | 46 | 01 |
| தசுன் ஷானக | 01 | 00 | 20 | 00 |
| ஷகிப் அல் ஹசன் | 03 | 00 | 31 | 00 |
அணி விபரம்
பி-லவ் கண்டி : தினேஷ் சந்திமால், பக்கார் ஷமான், செஹான் ஆராச்சிகே, அஞ்சலோ மத்யூஸ், இசுரு உதான, வனிந்து ஹசரங்க (c), முஜீப் உர் ரஹ்மான், ஆஷிப் அலி, துஸ்மாந்த சமீர, நுவான் பிரதீப், மொஹமட் ஹரிஸ்,
கோல் டைட்டன்ஸ்: ஷெவோன் டானியல், லசித் குரூஸ்புல்லே, பானுக ராஜபக்ச, டிம் செய்பேர்ட்(wk), ஷகிப் அல் ஹசன், தசுன் ஷானக (c), லஹிரு சமரகோன், தப்ரைஸ் ஷம்சி, கசுன் ராஜித, அஷான் பிரியரஞ்சன், ரிச்சட் நகர்வா.