கண்டி அணியின் ஆக்ரோஷம் தொடர்கிறது?

கோல் டைட்டன்ஸ் மற்றும் பி-லவ் கண்டி அணிகளுக்கிடையிலான போட்டி கண்டி பல்லேகல சர்வதேசக் கிரிக்கெட் மைதானத்தில் இன்றைய முதற் போட்டியாக நடைபெற்று வருகிறது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற காலி அணி களத்தடுப்பை தெரிவு செய்தது. முதலில் துடுப்பாடிய கண்டி அணி அபாரமான துடுப்பாட்டம் மூலம் வெற்றி பெறக்கூடிய இலக்கொன்றை தொட்டுள்ளது.

ஆரம்பம் முதலே நல்ல முறையில் துடுப்பாடிய கண்டி அணிக்கு பக்கார் ஷமான் சிறந்த ஆரம்பத்தை வழங்கினார். அவருக்கு மொஹமட் ஹாரிஸ், டினேஷ் சந்திமால் ஆகியோர் நல்ல இணைப்பாட்டங்களை வழங்கினார்கள். மத்தியவரிசையில் களமிறங்கிய வனிந்து ஹஸரங்க அதிரடியாக அடித்தாடி ஓட்ட எண்ணிக்கையினை சடுதியாக அதிகரித்தார். 18 பந்துகளில் அரைச்சதத்தை கடந்தார். அவரோடு இணைந்து அஞ்சலோ மத்தியூசும் அதிரடி நிகழ்த்த வான வேடிக்கையாக மைதானம் காட்சியளித்தது. 77 ஓட்டங்களை இருவரும் இணைப்பாட்டமாக பகிர்ந்தனர்.

20 ஓவர்களில் 05 விக்கெட்களை இழந்து 203 ஓட்டங்களை கண்டி அணி பெற்றுக் கொண்டது. இந்த தொடரில் முதற் தடவையாக அணி ஒன்று 200 ஓட்டங்களை கடந்துள்ளது.

கண்டி அணி கண்டியில் நடைபெற்ற இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ள நிலையில் இன்று மூன்றாவது போட்டியில் வெற்றி பெறக்கூடிய சூழ்நிலை ஒன்று உருவாகியுள்ளது.

இரு அணிகளுக்குமிடையில் நடைபெற்ற முதற் போட்டியில் காலி அணி வெற்றி பெற்றிருந்தது.

வீரர்ஆட்டமிழப்புபந்துவீச்சாளர்46
மொஹமட் ஹரிஸ்பிடி – தப்ரைஸ் ஷம்சிரிச்சட் நகர்வா. 171430
பக்கார் ஷமான்பிடி – ரிச்சட் நகர்வா. லஹிரு சமரகோன்453532
தினேஷ் சந்திமால்பிடி – ரிச்சட் நகர்வா. தப்ரைஸ் ஷம்சி251731
அஞ்சலோ மத்யூஸ்,பிடி – கசுன் ராஜிதலஹிரு சமரகோன்402332
வனிந்து ஹசரங்கபிடி – ஷெவோன் டானியல்கசுன் ராஜித642792
ஆஷிப் அலி  020300
இசுரு உதான  030200
       
       
       
       
       
உதிரிகள்  07   
ஓவர்  20விக்கெட்  05மொத்தம்203   
பந்துவீச்சாளர்ஓ.ஓட்டவிக்
கசுன் ராஜித04004202
லஹிரு சமரகோன்04003102
ரிச்சட் நகர்வா. 04003101
தப்ரைஸ் ஷம்சி04004601
தசுன் ஷானக01002000
ஷகிப் அல் ஹசன்03003100

அணி விபரம்

பி-லவ் கண்டி : தினேஷ் சந்திமால், பக்கார் ஷமான், செஹான் ஆராச்சிகே, அஞ்சலோ மத்யூஸ், இசுரு உதான, வனிந்து ஹசரங்க (c), முஜீப் உர் ரஹ்மான், ஆஷிப் அலி, துஸ்மாந்த சமீர, நுவான் பிரதீப், மொஹமட் ஹரிஸ்,

கோல் டைட்டன்ஸ்: ஷெவோன் டானியல், லசித் குரூஸ்புல்லே, பானுக ராஜபக்ச, டிம் செய்பேர்ட்(wk), ஷகிப் அல் ஹசன், தசுன் ஷானக (c), லஹிரு சமரகோன், தப்ரைஸ் ஷம்சி, கசுன் ராஜித, அஷான் பிரியரஞ்சன், ரிச்சட் நகர்வா.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version