பாராளுமன்றத்தில் பராமரிப்பு பணிகளில் ஈடுபடும் ஊழியர்கள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்படுவதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில் இது குறித்து விசாரணைகளை முன்னெடுப்பதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி னுமாரி விஜேரத்ன எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த பிரதமர் சபாநாயகர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
இதன்படி இதுகுறித்து விசாரணை செய்வதற்காக மூவர் அடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.