வறட்சி மற்றும் அனர்த்த நிலைமை காரணமாக எழுந்துள்ள அமைதியின்மையின் ஊடாக புதிய போராட்ட அலையை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளதாக புலனாய்வு பிரிவினர் ஜனாதிபதிக்கு இரகசிய அறிக்கை ஒன்றை வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த எதிர்ப்பு அலையை முன்னெடுக்க குழுவொன்று இணைந்துள்ளதாகவும், மக்களை வீதிக்கு இறக்கி கடந்த வருடம் இருந்த நிலைமையை மீண்டும் நாட்டில் கொண்டுவர அவர்கள் செயற்படுவதாகவும் கூறப்படுகிறது.
வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு அரசு தண்ணீர் தருவதில்லை என்றும், உணவுப் பற்றாக்குறை ஏற்படும் என்றும் காட்டி மக்களை தண்ணீருக்காகப் போராட வீதிக்கு இறக்க குறித்த குழு முயற்சிப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.