மீரிகம வில்வத்த பிரதேசத்தில் கொள்கலன் ட்ரக் வண்டியொன்று புகையிரதத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த விபத்து இன்று (09.08) இடம்பெற்றுள்ளது.
இதன் காரணமாக பிரதான பாதையில் ரயில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
விபத்தில் கொள்கலன் முழுமையாக சேதமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் குறித்த கொள்கலன் ட்ரக் வண்டியை செலுத்திய சாரதி தப்பியுள்ள நிலையில், அவருக்கு காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.