வைத்தியசாலைகளில் நோயாளர்களின் மரணம் தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கை சுகாதார அமைச்சரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல டுவிட்டரில் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள ருவிட்டர் பதிவில், “மருத்துவர் மற்றும் நோயாளியின் இரகசியத்தன்மையை பாதுகாக்கும் வகையில், முழு அறிக்கையும் வெளியிடப்பட மாட்டாது என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
அதன்படி, சம்பந்தப்பட்ட நிபுணர் குழுவின் பரிந்துரைகள் மற்றும் முடிவுகள் மட்டுமே பகிரங்கப்படுத்தப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.