கப்பம், பாதாள உலக செயற்பாடுகள், திருட்டு, போதைப்பொருள் கடத்தல் போன்றவற்றின் மூலம் பல பில்லியன் டொலர்களை குவித்துள்ள ஆட்கடத்தல்காரர்களின் சொத்துக்களிலிருந்து வரி அறவீடு செய்ய உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தயாராகி வருவதாக வாரப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த திட்டத்தில் இலங்கை காவல்துறையும் இணைந்து கொள்ளவுள்ளதுடன் வரலாற்றில் முதல் தடவையாக குற்றவாளிகளின் சட்டவிரோத சொத்துக்களில் இருந்து வரி அறவிடப்படும் என அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில் இந்த வரி விதிக்கப்படுகிறது.
அத்துடன் சட்டவிரோதமாக சொத்துக்களைக் குவித்துள்ள 8,000 கடத்தல்காரர்கள் தொடர்பான தரவுகள் சேகரிக்கப்பட்டு குறித்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.