ஹவாயில் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

ஹவாயில் காட்டுத் தீயில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 89 ஆக உயர்ந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

காட்டுத் தீயினால் பாதிக்கப்பட்டவர்களைத் தேடுவதற்கு மேலதிக நிபுணர்களின் உதவியும் அனுப்பப்பட்டுள்ளதுடன், மீட்கப்பட்டவர்களுக்கான மருத்துவப் பணிகள் தொடர்வதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்றும், வரும் நாட்களில் இறப்பு எண்ணிக்கை கணிசமாக உயரும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் ஹவாய் ஆளுநர் ஜோஷ் கிரீன் தெரிவித்துள்ளார்.

கிட்டத்தட்ட 1,000 பேர் இதுவரை தொடர்பு கொள்ளவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹவாய் தீவு இதுவரை சந்தித்திராத மிக மோசமான இயற்கை பேரழிவை சந்தித்து வருவதாகவும் ஆளுநர் தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply