சமனல குளத்தில் இருந்து உடவலவ நீர்த்தேக்கத்திற்கு நீர் திறந்துவிடப்பட்டு 05 நாட்கள் கடந்துள்ள நிலையிலும் சில விளைநிலங்களுக்கு இதுவரை நீர் வழங்கப்படவில்லை என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர வலியுறுத்துகின்றார்.
அகுனகொலபலஸ்ஸ பிரதேசத்தில், ஏற்பட்டுள்ள பாரிய பயிர் சேதம் தொடர்பில் அமைச்சரவைக்கு அறிவிக்கவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
எதிர்காலத்தில் அனைத்து நீர்த்தேக்கங்களையும் ஒரே இடத்தில் இருந்து கட்டுப்படுத்தும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் ஜனாதிபதி கவனம் செலுத்தியுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர மேலும் கூறியுளு்ளார்.