ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் 07 பேர் பலி!

உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய இரண்டு ஏவுகணைத் தாக்குதல்களில் 07 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 67 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கிழக்கு உக்ரைனில் உள்ள போக்ரோவ்ஸ்க் நகரின் அடுக்குமாடி கட்டிடங்கள், நிர்வாக கட்டிடங்கள், ஹோட்டல்கள் மற்றும் கடைகள் உள்ள பகுதியை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

தாக்குதலில் உயிரிழந்தவர்களில் உயர் அதிகாரிகளும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது. டோனெட்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள உக்ரேனிய இராணுவ நிர்வாகம், அழிக்கப்பட்ட ஐந்து மாடி கட்டிடத்தில் சிக்கியுள்ள மக்களைக் கண்டறியும் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுவதாக கூறப்படுகிறது.

Social Share

Leave a Reply