இம்மாதம் (ஆகஸ்ட்) முதல் பத்து (10) நாட்களுக்குள் 50,000 க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக இலங்கையின் சுற்றுலா அமைச்சு தெரிவித்துள்ளது.
சுற்றுலா அமைச்சின் தரவுகளின்படி, இந்த காலப்பகுதியில் மொத்தம் 51, 594 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாகவும், இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது பல மடங்கு அதிகம் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்தியாவிலிருந்து 9,146 சுற்றுலாப் பயணிககளும், ஐக்கிய இராச்சியத்திலிருந்து 6,939 சுற்றுலாப் பயணிகளும், சீனாவிலிருந்து 3,707 சுற்றுலாப் பயணிகளும் வருகை தந்துள்ளனர்.
பிரான்சிலிருந்து 3,249 சுற்றுலாப் பயணிகளும், ஜெர்மனியிலிருந்து 3,155 சுற்றுலாப் பயணிகளும் வருகை தந்துள்ளனர்.
மேலும், இந்த காலகட்டத்தில் இத்தாலி, ரஷ்யா, ஸ்பெயின், நெதர்லாந்து மற்றும் கனடா ஆகிய நாடுகளில் இருந்தும் அதிகளவிலான சுற்றுலா பயணிகளின் வருகை பதிவாகியுள்ளது.
இவ்வாண்டில் இதுவரையான காலப்பகுதியில் மொத்தம் 819, 507 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக சுற்றுலா அமைச்சு தெரிவித்துள்ளது.