நடிகர் ரஜினியின் உடல் நிலை அறிவிப்பு இன்று

நடிகர் சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சென்னை காவேரி வைத்தியசாலையில் நேற்று (28/10) அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் பல தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்திய ஊடகங்கள் வேறு வேறு செய்திகளை வெளியிட்டு வருகின்றன.

வழமையான சோதனைகளுக்காக அவர் வைத்தியசாலையில் அனுமத்திக்கப்பட்டு சோதனைகள் செய்யப்பட்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ள அதேவேளை, இதயத்துக்கு இரத்தம் செல்லும் நாளத்தில் நோய் ஒன்று ஏற்பட்டுளளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

இன்று காவேரி மருத்தவமனை ரஜினிகாந்தின் உடல் நிலைமை தொடர்பில் உத்தியோகப்பூர்ர்வமாக அறிவிக்கும் எனவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

புதிய தலைமுறை “இது வழக்கமான, ஒவ்வொரு வருடமும் செய்யப்படும் சோதனை என லதா ரஜினிகாந்த தமது செய்தி சேவைக்கு தெரிவித்ததாக” செய்தி வெளியிட்டுள்ளது.

ரஜினி இரண்டு தினங்களுக்கு முன்னர் தாதா சாகேப் பால்கே விருதினை பெற்றதன் பின்னர் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இந்திய குடியரசு தலைவர் ஆகியோரை சந்தித்து சென்னை திரும்பிய பின்னரே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்திய தகவல்களின் படி ரஜினிகாந்த் ஆபத்தான நிலையில் இல்லை என்பதும் சாதரண நிலையில் உள்ளார் என்பதும் சினிமா ரசிகர்களுக்கு சந்தோஷமான செய்தியே.

நடிகர் ரஜினியின் உடல் நிலை அறிவிப்பு இன்று

Social Share

Leave a Reply