ஜப்பானிடமிருந்து இலங்கைக்கு உதவித்தொகை!

ஜப்பானிய அரசாங்கம் “ஸ்கவிதா மனிதாபிமான உதவி மற்றும் நிவாரணத் திட்டத்தின்” கீழ் இலங்கைக்கு 170 மில்லியன் ரூபா உதவித் தொகையை வழங்கியுள்ளது.

வட மாகாணத்தில் கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துவதற்காகவே இந்த தொகை வழங்கப்பட்டுள்ளது.

நாட்டின் கண்ணிவெடி அகற்றும் வேலைத்திட்டத்தின் ஆரம்பத்திலிருந்து, ஜப்பான் தொடர்ச்சியான ஆதரவை வழங்கியதுடன், இதுவரையில் குறித்த வேலைத்திட்டத்திற்காக சுமார் 43 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியுள்ளது.

இந்தப் பணத்தைப் பயன்படுத்தி 2016ம் ஆண்டு முதல் இந்த ஆண்டு ஜூலை வரை 11,471 ஆட்கொல்லி வெடிகுண்டுகளும், 161 கண்ணிவெடிகளும் அகற்றப்பட்டுள்ளன.

Social Share

Leave a Reply