LPL இறுதிப் போட்டிக்கான முதல் அணி தெரிவாகும் போட்டி ஆரம்பம்!

லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டிக்கான முதல் அணியை தெரி செய்யும் போட்டி தற்சமயம் கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் ஆரம்பித்துள்ளது.

இந்தப் தொடரில் முதலிடத்தை பெற்றுக் கொண்ட தம்புள்ளை ஓரா மற்றும் இரண்டாம் இடத்தை பெற்றுக் கொண்ட கோல் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தம்புள்ளை அணி களத்தடுப்பை தெரிவு செய்துள்ளது.

இந்தப் போட்டியில் வெற்றி பெறுமணி எதிர்வரும் 20 ஆம் திகதி நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் விளையாடவுள்ளது. தோல்வியடையுமணி 19 ஆம் திகதி நடைபெறவுள்ள இரண்டாவது தெரிவுகாண் போட்டியில் விளையாடவுள்ளது.

அணி விபரம்

தம்புள்ளை ஓரா : குசல் மென்டிஸ் (wk & c), அவிஷ்க பெர்னாண்டோ, குசல் பெரேரா, சதீர சமரவிக்ரம, அலெக்ஸ் ரோஸ், தனஞ்சய டி சில்வா, ஹெய்டன் கெர், பினுர பெர்னாண்டோ, நூர் அஹமட் , ஹசன் அலி, துஷான் ஹேமந்த

கோல் டைட்டன்ஸ்: பானுக்க ராஜபக்ஷ, லசித் க்ரூஸ்புல்லே, லிட்டோன் டாஸ், ஷகிப் அல் ஹசன், தசுன் ஷானக (c), லஹிரு சமரகோன், கசுன் ராஜித, லஹிரு குமார, நஜிபுல்லா ஷர்டான், சீகுஹே பிரசன்ன, ரப்ரைஸ் ஷம்சி,

Social Share

Leave a Reply