கொழும்பு மாவட்டத்தின் பல பகுதிகளில் எதிர்வரும் சனிக்கிழமை (19,08) 18 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
மின்சார சபையின் மேல்நிலை மின் பாதை அமைப்பின் பராமரிப்பு பணிகள் காரணமாகவே இந்த நீர் வெட்டு அமுல்படுத்தப்படுவதாக நீர்வள அதிகார சபை தெரிவித்துள்ளது.
இதன்படி, எதிர்வரும் சனிக்கிழமை (19.08) காலை 08.00 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை (20.08) அதிகாலை 2.00 மணி வரை இவ்வாறு நீர் விநியோகம் தடைபடவுள்ளது.
இதன் மூலம் கொழும்பு, தெஹிவளை, கல்கிசை, கோட்டே, கடுவெல, மஹரகம, பொரலஸ்கமுவ, கொலொனாவ, கொட்டிகாவத்தை ஆகிய பகுதிகளுக்கும், முல்லேரியா, இரத்மலானை மற்றும் கட்டுபெத்த பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளுக்கும் நீர் விநியோகம் தடைப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.