AA சுப்பர் கிங்ஸ் மற்றும் ஜப்னா ஸ்டேலியன்ஸ் 20-20 போட்டி
மன்னாரை மையப்படுத்தி உருவாக்கப்பட்டிருக்கும் AA சுப்பர் கிங்ஸ் அணிக்கும், ஜப்னா ஸ்டேலியன்ஸ் அணிக்குமிடையிலான 20-20 கிரிக்கெட் போட்டி தொடர் ஒன்று எதிர்வரும் 19 மற்றும் 20 ஆம் திகதிகளில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெறவுள்ளது.
19 ஆம் திகதி பிற்பகல் 1 மணிக்கு முதற் போட்டி நடைபெறவுள்ளது. 20 ஆம் திகதி காலை 9 மணிக்கு இரண்டாம் போட்டியும், பிற்பகல் 1 மணிக்கு மூன்றாம் போட்டியும் நடைபெறவுள்ளது.
AA சுப்பர் கிங்ஸ் அணியில் மன்னார் மாவட்ட வீரர்களுடன் வவுனியாவிலிருந்து சஜூரன், யாழ்ப்பாணத்திலிருந்து அஜித், முல்லைத்தீவிலிருந்து அஞ்சயன் ஆகியோர் விளையாடவுள்ளனர்.
இந்த AAகிங்ஸ் அணி மன்னாரை மையப்படுத்தி வடக்கு வீரர்களை இணைத்து ஒரு உரிமைத்துவ அணி போன்று செயற்படும் எனவும் எதிர்காலத்தில் கொழும்பு வீரர்களையும் உள்வாங்கும் நோக்கமுள்ளதாகவும் இந்த அணியை உருவாக்கி முகாமைத்துவம் செய்யும் அமல் வி மீடியாவுக்கு தெரிவித்தார். மேலும் இலங்கையின் சகல பகுதிகளுக்கும் சென்று விளையாடும் நோக்கமுள்ளதாகவும், கொழும்பில் பல போட்டிகளை ஏற்படும் செய்யும் நோக்கோடு ஏற்பாடுகள் இடம்பெற்று வருவதாகவும் அவர் மேலும் எமக்கு தெரிவித்தார்.
இந்த தொடரில் விளையாடவுள்ள அணி விபரம்
