வெளிநாடுகளில் பணியாற்றுவதற்கு தகுதி பெற்ற 5000 வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறும் அபாயம் காணப்படுவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இந்த நிலையை தவிர்க்க அரசாங்கம் அவசர வேலைத்திட்டமொன்றை தயாரிக்க வேண்டும் என அதன் பேச்சாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
தற்போது பணியில் ஈடுபடும் மருத்துவர்களில் 4-ல் ஒருவர் முயற்சிக்கும் வைத்தியர் எனவும், இந்நிலை தொடருமாயின் எதிர்காலத்தில் இது பாரிய பிரச்சனைக்கு வித்திடும் என்றும், சுகாதார அமைச்சு இந்நிலையை தடுப்பதற்கான வழிமுறைகளை கண்டறிய வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
பயிற்சியின் பின்னரான நியமனங்களைப் பெற்ற 250 இற்கும் மேற்பட்ட வைத்தியர்கள் இவ்வாறு பயணிக்க தீர்மானித்துள்ளதாக வைத்தியர் சமில் விஜேசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.