பிரபல தொழிலதிபர் தினேஷ் ஷாப்டரின் மரணம் மற்றும் கொழும்பு சிறுவர் வைத்தியசாலையில் 3 வயது குழந்தையின் சிறுநீரக சத்திர சிகிச்சையின் பின்னரான மரணம், 2013ம் ஆண்டு தனியார் வைத்தியசாலை ஒன்றில் இடம்பெற்ற 5 வயது சிறுமியின் மரணம் மற்றும் 2014ம் ஆண்டு உணவு நச்சு தன்மையினால் தொழிலாளி ஒருவர் உயிரிழந்தமை தொடர்பில் தெளிவற்ற முரண்பாடான சட்ட வைத்திய அறிக்கைகளை வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்டு, சர்ச்சைகளில் சிக்கியுள்ள கொழும்பு சட்ட வைத்திய அதிகாரி ரூஹுல் ஹக் கட்டாய விடுமுறையில் அனுப்பட்டுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலங்கை மருத்துவ சபையின் தடையை மீறி, அவர் சட்ட வைத்திய பரிசோதனைகளை முன்னெடுத்துள்ளமை தொடர்பில் தகவல்கள் வெளிப்படுத்தப்பட்ட நிலையில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அரச வைத்திய சேவை ஆணைக் குழுவின் ஆலோசனைக்கு அமையவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இந்த விடயம் தொடர்பில் கடந்த 17ம் திகதி சுகாதார அமைச்சினால், இலங்கை மருத்துவச சபைக்கு கடிதம் மூலம் அறிவிக்கப்பட்ட போதிலும், கட்டாய விடுமுறைக்கான காரணம் தெளிவாக குறிப்பிடபப்டவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.