மதத்தின் பெயரால் இரத்தம் சிந்தக்கூடாது – தேரர்!

ஆயர் ஜெரம் பெர்னாண்டோ தனது தவறை ஏற்றுக்கொண்டால் அவரை மன்னிக்கத் தயார் என வணக்கத்துக்குரிய ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.  

ஜெரோம் பெர்னாண்டோ குறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு கூறியுள்ளார். 

இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,  ஜெரோம் பெர்னாண்டோ தெரிவித்த கருத்து காரணமாக புத்தர் அவமதிக்கப்பட்டதாக சமூகத்தில் கருத்து நிலவுவதாகவும் தெரிவித்துள்ளார்.  

அவருடைய பெற்றோர் அவரைச் சந்திக்க வந்து தங்கள் மகனின் குற்றத்தை ஏற்றுக்கொண்டதாகவும்  இன்றைய உலகம் மதத்தின் பெயரால் இரத்தம் சிந்தக்கூடாது என்றும் கூறிய அவர், இது போன்ற இணக்கமான விவாதங்கள் மிகவும் அவசியம் எனவும் வலியுறுத்தியுள்ளார். 

Social Share

Leave a Reply