காற்பந்து மகளிர் உலக சம்பியனாக மகுடம் சூடியது ஸ்பெய்ன்

அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற மகளிர் உலகக்கிண்ண காற்பந்தாட்ட தொடரில் ஸ்பெய்ன் அணி 1-0 என இங்கிலாந்து அணியை வென்று சம்பியனாக மகுடம் சூடிக்கொண்டது.

இரு அணிகளுமே இறுதிப் போட்டியில் முதற் தடவையாக களமிறங்கின. ஸ்பெய்ன் அணி அரை இறுதி சுற்றுக்கு தெரிவானது இதுவே முதற்தடவை. அந்த வேகத்தில் இறுதிப் போட்டி வரை சென்று வெற்றி பெற்றுள்ளார்கள்.

இங்கிலாந்து அணி ஏற்கனவே அரை இறுதிப் போட்டியில் இரு தடவைகள் விளையாடியிருத்த நிலையில் இறுதி வாய்ப்பை இழந்திருந்தது.

32 அணிகள் மோதிய இந்த வருட தொடரை அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகள் இணைந்து ஏற்பாடு செய்திருந்தன. அவுஸ்திரேலியா அணி நான்காமிடத்தை பெற்றுக்கொண்ட அதேவேளை, சுவீடன் அணி மூன்றாமிடத்தை பெற்றுக் கொண்டது.

Social Share

Leave a Reply