ரஷ்ய உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் இராணுவ ட்ரோன்களை எவ்வாறு இயக்குவது என்பது குறித்து கற்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரஷ்ய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உக்ரைன் போருக்கு மத்தியில் 2023 முதல் குழந்தைகளுக்கு பாடசாலைகளில் இராணுவப் பயிற்சியை மீண்டும் அறிமுகப்படுத்த மொஸ்கோ தீர்மானித்துள்ளது.
இதன்படி 15 முதல் 17 வயது வரையிலான மாணவர்களுக்கு ட்ரோன் பயிற்சி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, பள்ளிக் குழந்தைகள் “போரில் ஆளில்லா வான்வழி வாகனங்களை (UAVs) பயன்படுத்தக்கூடிய வழிகளைப் பற்றிய புரிதலைப் பெறுவார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.