தேயிலை பயிர்ச்செய்கையில் வீழ்ச்சி!

தற்போது நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக பலாங்கொடை பிரதேசத்தில் தேயிலை செய்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் பல பிரதேசங்களில் தேயிலை தோட்டங்கள் காய்ந்து  வருவதாகவும் தேயிலை விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். 

பலாங்கொட தஹமன, கல்கொட, பதுகாமிமன, ஹப்புகஹகுர, வில்பிட்ட, மாவெல உள்ளிட்ட பல பிரதேசங்களில் தேயிலை தோட்டங்கள் அழிந்து ஒரு மாதத்திற்கும் மேலாக தேயிலை பறிப்பு நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

இதன்காரணமாக கடும் பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளதாக விவசாயிகள் சுட்டிக்காட்டுகின்றனர். 

இதேவெளை  தோட்டங்களுக்கு நட்டஈடு வழங்குவது தொடர்பில் அதிகாரிகள் பேசினாலும், பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கும் தேயிலை விவசாயிகள் தொடர்பில் எவரும் பேசுவதில்லை எனவும் அவர்கள் கவலைத் தெரிவித்துள்ளனர். 

இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள சிறிய தேயிலை தோட்ட உரிமையாளர்கள், தேயிலையை மீண்டும் நடவு செய்து இலைகளை அறுவடை செய்ய மூன்று ஆண்டுகள் ஆகும். வறட்சியான காலநிலை தேயிலை தொழிலை கடுமையாக பாதித்துள்ளதாக தெரிவித்துள்ளனர். 

Social Share

Leave a Reply