இந்த வருடம் 860,000 இற்கும் அதிகமான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
கடந்த ஆகஸ்ட் 20 ஆம் திகதிவரையில் 98,831 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி, இந்தியாவிலிருந்து 19,804 சுற்றுலாப் பயணிகளும், பிரித்தானியாவிலிருந்து 12,188 சுற்றுலாப் பயணிகளும் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை சுட்டிக்காட்டியுள்ளது.
இதேவேளை இவ்வாண்டின் இதுவரையான காலப்பகுதியில், சுமார் 35 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் சீனாவில் இருந்து வருகை தந்துள்ளதாகவும் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை மேலும்தெரிவித்துள்ளது.