காலி சிறைச்சாலையில் உள்ள கைதிகளை இடமாற்றம் செய்வதை தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கைதிகளை வெளியேற்றும் நடவடிக்கை இரண்டு வாரங்களுக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக காலி சிறைச்சாலை அத்தியட்சகர் தெரிவித்துள்ளார்.
அந்த சிறையில் உள்ள கைதிகள் சுகவீனம் அடைந்துள்ளமை மற்றும் மரணம் அடைந்துள்ளமை காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, அவசர சந்தர்ப்பங்களில் கைதிகள் ஜூம் தொழில்நுட்பத்தின் ஊடாக விசாரணைகளுக்கு ஆஜர்படுத்தப்படவுள்ளதாக சிறைச்சாலை அத்தியட்சகர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை காலி சிறைச்சாலையில் மெனிங்கோகோகல் பாக்டீரியா பரவியதன் காரணமாக கைதிகள் உயிரிழந்து நோய்வாய்ப்பட்டிருக்கலாம் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.