ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடருக்கான பங்காளதேஷ் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் உபாதையடைந்த எபடாட் ஹொசைன் மாத்திரமே பங்களாதேஷ் அணியில் இடம்பெறவில்லை. அவருக்கு பதிலாக புதிய வீரர் டன்ஷிம் ஹசன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
அண்மையில் ஷகிப் அல் ஹசன் பங்களாதேஷ் அணியின் ஆசிய கிண்ணம் மற்றும் உலகக்கிண்ண தொடர்களின் தலைவராக நியமிக்கப்பட்டிருந்தார். இவ்வாறான நிலையில் பலமான முழுமையான அணி ஆசிய கிண்ண தொடருக்காக பங்களாதேஷ் கிரிக்கெட் சபையினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே இந்தியா அணி முழுமையான அணியை நேற்று அறிவித்துள்ளது. பங்களாதேஷ் அணியும் பலமான அணியை அறிவித்துள்ள நிலையில் ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் உலகக்கிண்ண தொடருக்கு முன்னதாக விறு விறுப்பான தொடராக அமையவுள்ளது.
அணி விபரம்
ஷகிப் அல் ஹசன், லிட்டோன் டாஸ், நஜ்முல் ஹொசைன் ஷான்டோ, தௌஹித் ரிதோய், முஸ்பிகீர் ரஹீம், அபிப் ஹொசைன், மெஹதி ஹசன் மிர்ஸா, டஸ்கின் அஹமட், ஹசன் மஹ்மூட், முட்டைபைசூர் ரஹ்மான், ஷொரிபுல் இஸ்லாம், நசும் அஹமட், மெஹதி ஹசன், மொஹமட் நைம், ஷமிம் ஹொசைன், தன்ஷிட் ஹசன், ரன்ஷிம் ஹசன்