ஆப்கானிஸ்தான் அணியை உருட்டி எடுத்த பாகிஸ்தான்

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையில் இலங்கை, ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற முதலாவது ஒரு நாள் சர்வதேசப் போட்டியில் பாகிஸ்தான் அணி 142 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது.

இந்தப் போட்டியில் முதலில் துடுப்பாடிய பாகிஸ்தான் அணி 47.1 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 201 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. இதில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் இமானுல் ஹக் 61 ஓட்டங்களையும், ஷதாப் கான் 39 ஓட்டங்களையும், இப்திகார் அஹமட் 30 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர். பந்துவீச்சில் முஜீப் உர் ரஹ்மான் 3 விக்கெட்களையும், மொஹமட் நபி, ரஷீட் கான் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்களை கைப்பற்றினார்கள்.

பதிலுக்கு துடுப்பாடிய ஆப்கானிஸ்தான் அணி 19.2 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 59 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. ரஹ்மனுள்ள குர்பாஸ் 18 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார். பந்துவீச்சில் ஹரிஸ் ரவூப் 5 விக்கெட்களையும், ஷகின் ஷா அப்ரிடி 2 விக்கெட்களையும் கைப்பற்றினார்கள்.

இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் அணி தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.

Social Share

Leave a Reply