சீன தேசிய பாதுகாப்பு அமைச்சு 6.2 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான 11 அதிவேகமாக அபிவிருத்தி செய்யப்பட்ட இராணுவ வாகனங்களை இலங்கைக்கு கையளித்துள்ளது.
இலங்கையின் உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் விசேட கடமைகளுக்காக இந்த வாகனங்கள் பதில் பாதுகாப்பு அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோனிடம் கையளிக்கப்பட்டுள்ளன.
இராணுவத் தலைமையகத்தில் இடம்பெற்ற நிகழ்வின் போது பிரமித்த பண்டார தென்னகோன் இந்த வாகனங்களை உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொண்டார்.
அதி நவீன தகவல் தொடர்பு சாதனங்களுடன் பதிக்கப்பட்ட இந்த வாகனங்கள் முதலில் இராணுவ நோக்கங்களுக்காக வடிவமைக்கப்பட்டவை ஆகும்.
இந்த அமைப்புகளைப் பயன்படுத்துவதன் மூலம், இலங்கை இராணுவத்தின் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு வலையமைப்பை மிகத் திறமையாகவும் ஒருங்கிணைக்கப்பட்ட முறையிலும் இயக்கும் திறனைப் பெறுவதற்கு இலங்கை இராணுவத்திற்கு வாய்ப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.