குளங்கள், கிராமங்களின் மறுமலர்ச்சி என்ற தொனிப்பொருளின் கீழ் வவுனியாவில் கண்காட்சி ஒன்று நடத்தப்பட்டுள்ளது.
குறித்த கண்காட்சியானது வவுனியா வெங்கலச்செட்டிக்குளம் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட முதலியார் குளம் உரோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையில் நேற்று (22.08) இடம்பெற்றது.
இதன்போது குளங்கள் கிராமங்களின் மறுமலர்ச்சி, பாதுகாப்பான குடிநீர் வழங்கல், அனர்த்த முன்னெச்சரிக்கை மற்றும் காலநிலைத் தொடர்பான தகவல் வழங்கல் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு விவசாயிகள், மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக குறித்த கண்காட்சி ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வில் வவுனியா மாவட்ட செயலாளர் P.A.சரத்சந்ர,மேலதிக மாவட்ட செயலாளர் T.திரேஸ்குமார், மாவட்டத்தின் பிரதேச செயலாளர்கள்,விவசாயத் திணைக்கள உத்தியோகத்தர்கள், நீர்பாசனத் திணைக்கள உத்தியோகத்தர்கள்,ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் பங்கேற்றிருந்தனர்.