இலங்கை, இங்கிலாந்து அணிகளுக்கிடையில் நடைபெற்ற உலக கிண்ண 20-20 கிரிக்கெட் தொடரில் இன்று இலங்கை அணியினை வெற்றி பெற்றதன் மூலம் இங்கிலாந்து அணி அரை இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.
இந்த வருட தொடரில் முதல் அணியாக அரை இறுதிப் போட்டிக்கு இங்கிலாந்து அணி தகுதி பெற்றுள்ளது. விளையாடிய நான்கு போட்டிகளிலும் வெற்றி பெற்று 8 புள்ளிகளை பெற்றதனால் இங்கிலாந்து அணி அடுத்த சுற்று வாய்ப்பை பெற்றுள்ளது.
இலங்கை அணி 4 போட்டிகளில் 1 வெற்றியினை மாத்திரம் பெற்றுள்ள நிலையில் அடுத்த சுற்றான அரை இறுதி வாய்ப்பை இழந்துள்ளது. இலங்கை அணி இருந்த நிலைக்கு தற்போதைய இந்த இளைய அணி இந்தளவு போரடியதே போற்றத்தக்கது.
இலங்கை, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான இன்றைய போட்டியில் முதலில் துடுப்பாடிய இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 163 ஓட்டங்களை பெற்றது. இதில் ஜோஸ் பட்லர் 101 (67) ஓட்டங்களையும், ஒய்ன் மோர்கன் 40 (36) ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் வனிது ஹசரங்க 3(4-21) விக்கெட்களையும் ,டுஸ்மாந்த சமீர 1 (4-43 ) விக்கெட்டையும் கைப்பற்றினார்கள்
பதிலுக்கு துடிப்பாடிய இலங்கை அணி 19 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 137ஓட்டங்களை பெற்றது. இதில் தஸூன் சாணக்க 26(24)ஓட்டங்களையும், வனிது ஹசரங்க 34(21)ஓட்டங்களையும், பானுக்க ராஜபக்ச 26(18) ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் ஆதில் ரஷீத் 2 (4-19) விக்கெட்களையும், கிறிஸ் ஜோர்டான் 2 (4-19) விக்கெட்களையும் மொயின் அலி 2 விக்கெட்களையும் கைப்பற்றினார்கள்.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.