இந்தியாவிற்கு வாழ்த்து தெரிவித்தார் சஜித்!

சந்திரயான் 3 விண்கலத்தை வெற்றிகரமாக தரையிறக்கிய இந்திய அரசாங்கத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வாழ்த்து தெரித்துள்ளார்.

இது குறித்து பாராளுமன்றத்தில் கருத்து வெளியிட்ட அவர், “ஜூலை 14 ஆம் திகதி விண்ணில் ஏவப்பட்ட சந்திரயான் 3, தனது பயணத்தை முடித்துக்கொண்டு நிலவின் தென் துருவத்தை அடைந்ததாகவும், இதுவரை இவ்வாறு வெற்றிகரமாக தரையிறங்கிய ஒரே நாடு இந்தியா தான் என்றும் அவர் கூறியுள்ளார்.

தெற்காசிய பிராந்திய நாடான இந்தியா, இவ்வாறான செயற்பாட்டை ஆரம்பித்து அதில் சாதித்த இந்திய அரசாங்கத்திற்கு தனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவிப்பதாக அவர் கூறியுள்ளார்.

Social Share

Leave a Reply