எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விவகாரம் – நட்டஈடு வழங்க இணக்கம்!

இலங்கை கடற்பரப்பில் எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் விபத்துக்குள்ளானமை தொடர்பில் கப்பல் நிறுவனம் 850,000 மில்லியன் டொலர்களை நட்டஈடாக வழங்க இணங்கியுள்ளதாக நீதி, சிறைச்சாலைகள் விவகாரம் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.  

பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அமைச்சர் இதனை தெரிவித்தார்.

குறித்த நட்டஈட்டை இலங்கை ரூபாயில் தர அவர்கள் ஒப்புக்கொண்டுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார். 

இது தொடர்பான வழக்கு சிங்கப்பூர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டதையடுத்து, சம்பந்தப்பட்ட காப்பீட்டு நிறுவனத்துடன் நடத்திய பேச்சுவார்த்தையில் இந்த உடன்பாடு எட்டப்பட்டதாக அமைச்சர் மேலம் கூறிள்ளார்.

Social Share

Leave a Reply