நீர் தொட்டியில் விழுந்து சிறுமி உயிரிழப்பு!

நெலும்குளம், பாரதிபுரம் பகுதியில் தண்ணீர் தொட்டியில் விழுந்து சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார். 

மேலும் சில குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருந்த போது இந்த விபத்து நேர்ந்துள்ளமை முதற்கட்ட விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

நீர் தாங்கியில் தவறி விழுந்த சிறுமி வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். 

வவுனியா பாரதிபுரத்தைச் சேர்ந்த 01 வயதும் 11 மாதங்களை உடைய சிறுமியே இவ்வாறு  உயிரிழந்துள்ளார்.

சடலம்  நீதவான் விசாரணைகளின் பின்னர் பிரேத பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

நீர் தொட்டியில் விழுந்து சிறுமி உயிரிழப்பு!
நீர் தொட்டியில் விழுந்து சிறுமி உயிரிழப்பு!

Social Share

Leave a Reply