மடகஸ்கரின் தலைநகரான அன்டனானரிவோ மைதானத்தில் நேற்று(25.08) ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 7 குழந்தைகள் உட்பட 13 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அந்நாட்டின் பரியா எனும் தேசிய மைதானத்தில் நடந்த இந்திய பெருங்கடல் தீவு போட்டிகளின் ஆரம்ப நிகழ்விலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஒன்றுகூடியுள்ள நிலையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மரணித்தவரிகளின் எண்ணிக்கை தொடர்பில் இதுவரையில் முழுமையான தகவல்கள் வெளியாகவில்லை என, மீப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளது.