நான் இறக்க தயார்!

ரஷ்ய கூலிப்படையின் தலைவர் யெவ்கெனி பிரிகோஜின் உயிரிழந்துள்ள நிலையில் அவருடைய மரணம் தொடர்பில் சர்ச்சைகள் நீடித்து வருகின்றன.

அந்தவகையில்  அவருடைய மரணம் குறித்து தற்போது பெலாரஸ் ஜனாதிபதி அலெக்சாண்டர் லுகாஷென்கோ கூறுகையில்  யெவ்கெனி பிரிகோஜின்  ஆபத்தில் இருப்பதாக தான் பல சந்தர்ப்பங்களில் எச்சரித்ததாக தெரிவித்துள்ளார்.

வாக்னர் குழுவினால் ஆரம்பிக்கப்பட்ட கிளர்ச்சியின் போது தான் இந்த எச்சரிக்கையை விடுத்த போதிலும்  பிரிகோஷின் தான் இறக்கத் தயார் எனக் கூறி அதனை மறுத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதில் இருந்து நீ இறந்து விடுவாய்.  உன் கூட்டமும் இறந்துவிடும் என்று கூறினேன். ஆனால் என்ன நடந்தாலும் நான் இறந்துவிடுவேன் எனத் தெரிவித்தார். நான் வீரனாக சாவேன் என்று கூறினார் என அலெக்சாண்டர் லூகோசென்கோ தெரிவித்துள்ளார்.

இதை யார் செய்தார்கள் என்று எனக்குத் தெரியவில்லை ஆனால் புடினை எனக்குத் தெரியும். அவர் ஒரு விவேகமான  அமைதியான நபர். புடின் இப்படிச் செய்வார் என்று நான் நினைக்கவில்லை.’ எனக் கூறியுள்ளார்.

Social Share

Leave a Reply