ரயில் பெட்டியில் தீ விபத்து – பத்து பேர் பலி!

ஆன்மீக சுற்றுலா சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள ரயிலின் ஒரு பெட்டியில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளதுடன், 20 பேர் வரையில் காயமடைந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தியாவில், தமிழகத்தில் இருந்து மதுரை நோக்கிச் சென்ற ரயிலிலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

குறித்த விபத்து இடம்பெறும்போது ரயில் பெட்டியில் சுமார் 60 பயணிகள் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரயிலில் பயணித்த யாத்திரிகர் ஒருவர் சட்டவிரோதமாக வைத்திருந்த எரிவாயு சிலிண்டர் வெடித்ததன் காரணமாக இந்த வெடிப்பு ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

மதுரை ரயில் நிலையத்தில் குறித்த ரயில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தபோதே இந்த குண்டுவெடிப்பு இடம்பெற்றுள்ளது.

Social Share

Leave a Reply