பச்சையாக சாப்பிடக் கூடாத காய்கறிகள்!

நம் உடலை ஆரோக்கியமாக வைப்பதற்கு உணவு பெரும் பகுதி பங்கை வகிக்கிறது என்பதை நாம் அறிவோம். உணவைப் பொறுத்தவரை காய்கறிகள் மற்றும் பழங்கள் நமது உணவின் பிரதான பகுதியாக இருக்க வேண்டும். எல்லா காய்கறிகளையும் பச்சையாக சாப்பிட முடியாது. அந்த வகையில் பச்சையாக சாப்பிட கூடாத காய்கறிகள் சிலவற்றைப் பற்றி இப்பொழுது தெரிந்து கொள்ளலாம்.

சேப்பங்கிழங்கு இலைகள்

இதனை வேக வைத்துதான் உண்ண வேண்டும். ஏன் என்றால் இந்த இலைகளில் இருக்கக்கூடிய அதிக அளவு ஆக்சலேட் நமது உடலுக்கு தீங்கு விளைவிக்க கூடியது.

முட்டைகோஸ்

இதில் நம் கண்ணுக்கு புலப்படாத சில புழுக்கள் இருக்கும். ஆகையால் இந்த கீரையை நாம் எப்போதும் சுடுதண்ணீரில் ஊறவைத்து, அல்லது வேகவைத்து சாப்பிடலாம்.

குடைமிளகாய்

குடைமிளகாயிலும் புழுக்கள் மற்றும் புழுக்களின் முட்டைகள் தங்கி இருக்கலாம். ஆகவே குடைமிளகாயை நறுக்கி அதனை சுடுநீரில் நன்றாக கழுவிய பிறகு அவற்றை சாப்பிட வேண்டும்.

கத்தரிக்காய்

இதிலும் கண்ணுக்கு தெரியாத புழுக்கள் இருக்கலாம். ஆகவே இதனை சமைத்து உண்ணுவது நல்லது.

Social Share

Leave a Reply