இலங்கையில் சர்வதேச குத்துச்சண்டை தினம் ஆகஸ்ட் 27 அன்று கண்டி ஜோர்ஜ் ஈ டி சில்வா பூங்காவில் விமர்சையாக கொண்டாடப்பட்டது.
இலங்கை குத்துச்சண்டை சங்கம் மற்றும் கண்டி புனித சில்வெஸ்டர் கல்லூரி ஆகியவற்றினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த விழா BASL உப தலைவர் வசந்த குமார தலைமையில் நடைபெற்றது. இதில் 150க்கும் மேற்பட்ட குத்துச்சண்டை வீரர்கள் பாடசாலைகளில் இருந்து கலந்து கொண்டனர்.
சர்வதேச குத்துச்சண்டை தினம் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 27 அன்று கொண்டாடப்படுகிறது. 1974 ஆம் ஆண்டு கியூபாவின் ஹவானாவில் நடைபெற்ற சர்வதேச குத்துச்சண்டை கூட்டமைப்பு (IBA) உலக சாம்பியன்ஷிப் போட்டியின் முதல் பதிப்போடு இது ஆரம்பமாகியுள்ளது.
ஆகஸ்ட் 17 முதல் ஆகஸ்ட் 30 வரை நடைபெற்ற இப்போட்டியில் 11 சாம்பியன்கள் முடிசூட்டப்பட்டு பதக்கப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளன.
சர்வதேச குத்துச்சண்டை தினம் முதன்முதலில் 2017 இல் கொண்டாடப்பட்டது. அதன் பிறகு, ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 22 அன்று குத்துச்சண்டையை கொண்டாட ரசிகர்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் பங்குதாரர்கள் ஒன்று கூடுமாறு ஊக்குவிக்கப்படுகின்றனர்.