தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸநாயக்கே எதிர்வரும் ஜனாதிபதித்தேர்தலில் “தேசிய மக்கள் சக்தி” கட்சியின் வேட்பாளராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
தேசிய மக்கள் சக்தியின் நிர்வாகசபை கூட்டத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது இம் முடிவு எடுக்கப்பட்டதாக தொலைக்காட்சி அரசியல் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போதே இந்த விடயத்தை தெரிவித்திருந்தார்.
திங்கட்கிழமை மாலை நடைபெற்ற கூட்டத்தில் அனுரகுமாரவின் பெயர் உத்தியோகபூர்வமாக தெரிவு செய்யப்பட்டு அங்கீகரிக்கப்பட்டதாக மேலும் அவர் தெரிவித்துள்ளார்.