வங்கிகள் இன்று திறந்திருக்கும்!

அரச வங்கிகளை இன்று (30.08) திறக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. வழமையாக போயா தினங்களில் வங்கிகள் மூடப்படும். இருப்பினும் இன்றைய தினம் வங்கிகளை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

இதன்படி  வங்கிகள் வட்டி செலுத்துவதற்காக மட்டுமே திறக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

அதன்படி, மக்கள் வங்கி, சேமிப்பு வங்கி மற்றும் இலங்கை வங்கி ஆகியவற்றின் அனைத்து கிளைகளும் இன்று காலை 8.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

Social Share

Leave a Reply