பொலிஸ் காவலில் இருந்த பெண் உயிரிழப்பு : ஒருவர் கைது!

வெலிக்கடைப் பொலிசாரினால் கைது செய்யப்பட்ட பின்னர் காவலில் வைக்கப்பட்டிருந்த வீட்டுப் பணிப்பெண் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் குறித்த பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவரை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 11 ஆம் திகதி வரை விளக்குமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

42 வயதான ர.ராஜ்குமாரி என்ற பெண் பிரபல தொலைக்காட்சி தயாரிப்பாளரும், வர்த்தக பிரமுகரின் வீட்டில் பணிப்பெண்ணாக பணிபுரிந்து வந்த நிலையில், திருட்டு சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு பொலிஸ் காவலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், உயிழந்திருந்தார்.

Social Share

Leave a Reply