உலகக்கிண்ண 20-20 தொடரில் நேற்று (02/11) முதற் போட்டியாக தென் ஆபிரிக்கா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான போட்டி நடைபெற்றது. இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தென் ஆபிரிக்கா அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.
முதலில் துடுப்பாடிய பங்களாதேஷ் அணி 18.2 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 84 ஓட்டங்களை பெற்றது. இதில் மஹதி ஹசன் 27(25) ஓட்டங்களையும், லிட்டொன் தாஸ் 24(36) ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் ககிஸோ ரபாடா 3 விக்கெட்களையும், அன்றிச் நொட்ஜியா 3 விக்கெட்களையும், ரப்ரைஸ் ஷம்சி 2 விக்கெட்களையும் கைப்பற்றினார்கள்.
பதிலுக்கு துடுப்பாடிய தென் ஆப்ரிக்கா அணி 13.3 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 86 ஓட்டங்களை பெற்றது. இதில் டெம்பா பவுமா ஆட்டமிழக்காமல் 31(28) ஓட்டங்களையும், ராஸீ வன் டெர் டுசென் 22(27) ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் டஸ்கின் அஹமட் 2 விக்கெட்களையும் மஹேதி ஹசன், நசும் அஹ்மத் ஆகியோர் ஒவ்வொரு விக்கெட்களையும் கைப்பற்றினார்கள்.
தென் ஆப்ரிக்கா அணி 6 விக்கெட்களினால் வெற்றி பெற்றது.இந்த போட்டியின் நாயகனாக ககிஸோ ரபாடா தெரிவு செய்யப்பட்டார்.
இரண்டாம் போட்டியாக பாக்கிஸ்தான் மற்றும் நமீபியா அணிகளுக்கிடையிலான போட்டி நடைபெற்றது. இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாக்கிஸ்தான் அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது. முதலில் துடுப்பாடிய.பாக்கிஸ்தான் அணி 20 ஓவர்களில் 2 விக்கெட்களை இழந்து 189 ஓட்டங்களை பெற்றது.
இதில் மொஹமட் ரிஸ்வான் ஆட்டமிழக்காமல் 79(50) ஓட்டங்களையும், பாபர் அசாம் 70(49) ஓட்டங்களையும், மொஹமட் ஹாபீஸ் ஆட்டமிழக்காமல் 32(16) ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் ஜான் பிரைலிங், டேவிட் விஸே ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்களை கைப்பற்றினார்கள்.
பதிலுக்கு துடுப்பாடிய நமீபியா அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 144 ஓட்டங்களை பெற்றது. இதில் டேவிட் விஸே ஆட்டமிழக்காமல் 43(31) ஓட்டங்களையும், கிரைக் வில்லியம்ஸ் 40(37) ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் ஷதாப் கான், ஹரிஸ் ரௌப், இமாட் வசிம், ஹசன் அலி ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்களை கைப்பற்றினார்கள்.
பாக்கிஸ்தான் அணி 45 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது.இந்த போட்டியின் நாயகனாக மொஹமட் ரிஸ்வான் தெரிவு செய்யப்பட்டார். இந்த வெற்றியின் மூலமாக பாக்கிஸ்தான் அணி அரை இறுதி போட்டிக்கு தெரிவானது.
