மத்திய வங்கியின் அனுமதியைப் பெற்ற UB finance இல் 2650 இற்கும் அதிகமான வைப்பாளர்கள் வட்டி வருமானத்தைப் பெறுவதற்காக 1.36 பில்லியன் ரூபாவை வைப்பிலிட்டுள்ளனர் என்றும், மத்திய வங்கி மற்றும் அதன் ஆளுநர்களின் செயற்பாடுகளினால் இந்த வைப்பாளர்களின் வைப்புத் தொகைக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
அநீதி இழைக்கப்பட்ட UB finance வைப்பாளர்களுடன் இன்று (31.08) பிற்பகல் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், நாட்டை வங்குரோத்தாக்கியவர்களால் இப்பிரிவினருக்கு அநீதி இழைக்கப்பட்டதாகவும், தற்போதைய அரசாங்கமும் தொடர்ந்து ஏமாற்றி வருவதாகவும் அதனால் தான் பாராளுமன்றத்தில் குரல் எழுப்பி இதற்கு நியாயத்தைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார்.