மருந்து இறக்குமதியில் அமெரிக்க ஆலோசனை பெறப்படும்

எதிர்காலத்தில் இலங்கையில் மருந்துகளை இறக்குமதி செய்வது, தொடர்பில் அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து கூட்டமைப்பின் (FDA) ஆலோசனையை பெறவுள்ளதாக தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்துதல் அதிகாரசபையின் தலைவர் S.D ஜயரட்ண நேற்று(30.08) தெரிவித்திருந்தார்.

அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து கூட்டமைப்பினால், இலங்கை மன்ற கல்லூரியில் நடாத்தப்பட்ட பயிற்சி நிகழ்வில் கலந்து கொண்டபோது அவர் இவ்வாறு கூறினார். அத்தோடு இதற்குத் தேவையான அறிவை வழங்குவதற்கு தேசிய மருந்துகள் ஒழுங்கமைப்பு ஆணைக்குழு தயாராக இருப்பதாகவும் மேலும் தெரிவித்தார்

தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்துதல் அதிகாரசபையின் மருந்தாளர்கள், அதிகாரிகள் சுமார் 50 பேர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இந்த திட்டத்தின் மூலம் எதிர்காலத்தில் தரம் குறைந்த மருந்துகள் உற்பத்தி உற்பத்தி செய்வது குறைக்கப்படும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இந்நிகழ்வில் NMRAஇன் தலமை அதிகாரி விஜித் குணசேகர, FDAஇன் இந்திய அலுவலக இயக்குனர் சாரா மக்முல்லேனும், சர்வதேச உறவுகள் நிபுனரும் FDA இந்திய அலுவலக மூத்த தொழில்நுட்ப ஆலோசகருமான ஃபுக் குயேன் மற்றும் USFDA இந்தியாவின் மூத்த தொழில் நுட்ப்ப ஆலோசகரும் கலந்துகொண்டனர்.

Social Share

Leave a Reply