இலங்கை அணிக்கு சாதனை வெற்றி

ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்களாதேஷ் அணிக்கெதிராக இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றி இலங்கை அணிக்கு ஒரு நாள் சர்வதேசப் போட்டிகளில் பதினோராவது தொடர் வெற்றியாக அமைந்துள்ளது.

ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டியாக கண்டி பல்லேகல சர்வதேசக் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் 165 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கோடு துடுப்பாடிய இலங்கை அணி 39 ஓவர்களில் 05 விக்கெட்களை இழந்து 165 ஓட்டங்களை பெற்று 05 விக்கெட்களினால் வெற்றி பெற்றுள்ளது.

ஆரம்ப விக்கெட்களை வேகமாக இழந்த இலங்கை அணி தடுமாறியது. 15 ஓட்டங்களுக்கு இரண்டு விக்கெட்கள், 43 ஓட்டங்களுக்கு மூன்று விக்கெட்கள் என்ற நிலையிலிருந்த இலங்கை அணியை சதீர சமீரவிக்ரம, சரித் அசலங்க ஆகியோர் மீது எடுத்தனர். சதீராவின் அண்மைக்கால துடுப்பாட்டம் இலங்கை அணிக்கு மத்திய வரிசையில் குறிப்பாக நான்காமிலக்கத்தில் நம்பிக்கையை வழங்கி வருகிறது. சதீர சமரவிக்ரம தனது நான்காவது அரைச்சதத்தை பெற்றுக்கொண்டார். சரித் அசலங்க இந்தப் போட்டியில் போர்முக்கு திரும்பியுள்ளமை அணிக்கு வரவுள்ள போட்டிகளில் மேலும் பலமாக அமையும். இருவரும் 82 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்து கொண்டனர்.

இணைப்பாட்டம் முறியடிக்கப்பட அடுத்து மேலும் ஒரு விக்கெட் வீழ்த்தப்பட்ட போட்டி விறு விறுப்பான கட்டத்துக்கு நகர்ந்தது. சரித் அஸலங்க தனது ஒன்பதாவது அரைச்சதத்தை பூர்த்தி செய்து அணியை வெற்றி வரை அழைத்துச்சென்றார். தஸூன் சாணக்க அவரோடு இணைப்பாட்டம் ஒன்றை உருவாக்கி வெற்றியை இலகுபடுத்தினார்.

முன் வரிசையில் தடுமாறிய டிமுத், குஷல் மென்டிஸ், பத்தும் நிஸ்ஸங்க ஆகியோர் இனிவரும் போட்டிகளில் சிறப்பாக செயற்படவேண்டும். வரவுள்ள போட்டிகள் மேலும் கடினமாக அமையவுள்ளன.

பங்களாதேஷ் அணியின் ஆரம்ப பந்துவீச்சாளர்கள் இறுக்கமாகவும், சிறப்பாகவும் பந்துவீசியமை இலங்கை அணி மீது அழுத்தத்தை வழங்கியது. ஆடுகளம் மற்றும் வெற்றி இலக்கை கணித்து துடுப்பாட்ட வீரர்கள் நிதானமாக துடுப்பாடியமையினால் இந்த வெற்றி சாத்தியமானது. பங்களாதேஷ் அணியின் தலைவர் ஷகிப் அல் ஹசன் மிகவும் சிறப்பாக பந்துவீசியிருந்தார்.

பங்களாதேஷ் அணி துடுப்பாட்டத்தில் ஓட்டங்களை பெற தவறியாமையே அவர்களது தோல்விக்கு முக்கியமான காரணமாக அமைந்திருந்தது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பாடிய பங்காளதேஷ் அணி, இலங்கை அணியின் பந்துவீச்சில் சிரமப்பட்டு ஓட்டங்களை பெற தடுமாறியது. விக்கெட்கள் ஒரு பக்கமாக வீழ்த்தப்பட்ட போதும் நஜிமுல் ஹொசைன் ஷாண்டோ நிதானமாக துடுப்பாடி ஓட்டங்களை பெற்றுக் கொடுத்து அணியை ஓரளவு போராடக்கூடிய நிலைக்கு எடுத்துச் சென்றார். அவரது 89 ஓட்டங்கள் மூலமாகவே பங்களாதேஷ் அணி 42.4 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 164 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

மஹீஸ் தீக்ஷண ஆரம்ப விக்கெட்டை கைப்பற்றிக் கொடுக்க இரண்டாவது விக்கெட்டினை தனஞ்சய டி சில்வா கைப்பற்றினார். மூன்றாவது விக்கெட்டினை மதீஷ பத்திரன கைப்பற்ற 36 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்கள் என்ற நிலை உருவானது. தௌஹித் ரிதோய், நஜிமுல் ஹொசைன் ஷாண்டோ இணைப்பாட்டம் ஒன்றை ஏற்படுத்தி அணியை வலுவான நிலைக்கு எடுத்து செல்லும் போது 55 ஓட்ட இணைப்பாட்டம் தஸூன் சாணக்கவினால் முறியடிக்கப்பட்து. அதன் பின்னர் சிறப்பான இணைப்பாட்டங்கள் அமையவில்லை.

இலங்கை அணியின் பந்துவீச்சு மற்றும் பந்துவீச்சு மாற்றங்கள் சரியான முறையில் அமைந்தது. அனைவருமே ஓட்டங்களை வழங்கமால் இறுக்கமாக பந்துவீசினார்கள். அதன் காரணமாக பங்களாதேஷ் அணியினை கட்டுப்படுத்த முடிந்தது. மதீஷ பத்திரன இறுதி நேரத்தில் சிறப்பாக பந்துவீசி நான்கு விக்கெட்களை கைப்பற்றினார். இது அவரின் சிறந்த பந்துவீச்சு பெறுதியாகும். இறுதி இரண்டு விக்கெட்களையும் இரண்டு பந்துகளில் கைப்பற்றினார்.

பகல் வேளையில் மழைக்கான வாய்ப்புகள் காணப்பட்ட போதும் இரவு வேளையில் மழைக்கான வாய்ப்புகள் எதுவேமே இருக்கவில்லை. அத்தோடு குளிர் காலநிலை காணப்பட்டது.

வீரர்ஆட்டமிழப்புபந்துவீச்சாளர்46
பத்தும் நிஸ்ஸங்கபிடி- முஷ்பிகுர் ரஹீம்ஷொரிபுல் இஸ்லாம் 141310
டிமுத் கருணாரட்னBOWLEDரஸ்கின் அஹமட்010300
குசல் மென்டிஸ்Bowledஷகிப் அல் ஹசன்052110
சதீர சமரவிக்ரமSt. முஷ்பிகுர் ரஹீம் 547760
சரித் அசலங்க  629251
தனஞ்சய டி சில்வாBowledஷகிப் அல் ஹசன்020700
தஸூன்  ஷானக  142110
       
       
       
       
உதிரிகள்  13   
ஓவர்  39விக்கெட்  05மொத்தம்165   
பந்துவீச்சாளர்ஓ.ஓட்டவிக்
ரஸ்கின் அஹமட்07013401
ஷொரிபுல் இஸ்லாம் 04002301
ஷகிப் அல் ஹசன்10002902
முஸ்டபைசூர் ரஹ்மான் 03001200
மெஹதி ஹசன் மிராஸ்05002600
மெஹதி ஹசன்10003501
     
வீரர்ஆட்டமிழப்புபந்துவீச்சாளர்46
நைம் ஷேக்பிடி- பத்தும் நிஸ்ஸங்கதனஞ்சய டி சில்வா162330
ரன்ஷிட் ஹசன் ரமீம்L.B.Wமஹீஸ் தீக்ஷண000200
நஸ்முல் ஹொசைன் சன்டோBowledமஹீஸ் தீக்ஷண8912270
ஷகிப் அல் ஹசன்பிடி- குஷல் மென்டிஸ்மதீஷ பத்திரன051110
தௌஹித் ரிதோய்L.B.Wதஸூன் சாணக்க204100
முஷ்பிகுர் ரஹீம்பிடி- டிமுத் கருணாரட்னமதீஷ பத்திரன132200
மெஹதி ஹசன் மிராஸ்Run Out 051100
மெஹதி ஹசன்L.B.Wடுனித் வெல்லாளகே061600
ரஸ்கின் அஹமட்பிடி- மஹீஸ் தீக்ஷணமதீஷ பத்திரன000200
ஷொரிபுல் இஸ்லாம்   020500
முஸ்டபைசூர் ரஹ்மான் L.B.Wமதீஷ பத்திரன000200
உதிரிகள்  08   
ஓவர்  42.4விக்கெட்  10மொத்தம்164   
பந்துவீச்சாளர்ஓ.ஓட்டவிக்
கஸூன் ரஜித07002900
மஹீஸ் தீக்ஷண08011902
தனஞ்சய டி சில்வா10003501
மதீஷ பத்திரன7.4003204
டுனித் வெல்லாளகே07003001
தஸூன் சாணக்க03001601
     

Social Share

Leave a Reply